1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (15:27 IST)

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!
நேற்று முன் தினம்  நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணி பேட் செய்து கொண்டிருந்த போது தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது தோனி இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷர்துல் தாக்கூர் இறங்கி அவுட் ஆன பின்னர்தான் ஒன்பதாவது வீரராக களமிறங்கினார். இறங்கிய வேகத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது முன்கூட்டியெ இறங்காமல் தோனி ஒன்பதாவது இடத்தில் இறங்கியது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தோனியின் இந்த முடிவுக்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட தசைநார் கிழிவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பப் போட்டிகளில் லேசாக இருந்த அந்த கிழிவு இப்போது பெரிதாகியுள்ளதாம். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுத்துக் கொள்ள சொன்னபோதும் தோனி அதை ஏற்காமல் விளையாடி வருகிறாராம். அணியில் டெவன் கான்வே இருந்திருந்தால் தோனி கண்டிப்பால ஒரு பிரேக் எடுத்திருப்பார் என சொல்லப்படுகிறது.