வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (21:14 IST)

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் தற்போது 55 ஆவது லீக் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக் ப்ரேஸர் மெக்ருக் மற்றும் அபிஷேக் போரல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் அதன்பின்னர் வந்த நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்களை இழந்தனர்.

அதன் பின்னர் பின்வரிசையில் வந்த டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆட டெல்லி அணி 200 ரன்களைக் கடந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்களை இழந்து 221  ரன்களை சேர்த்தது. இந்த இமாலய இலக்கை வலுவான பேட்டிங் கொண்டுள்ள ராஜஸ்தான் அணி துரத்திப் பிடிக்கப் போராடும் என்பதால் இரண்டாவது இன்னிங்ஸ் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.