தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?
- ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி தடுமாறுகிறார்… காரணம் இதுதான் –முன்னாள் வீரரின் கருத்து!
- டக் அவுட் ஆனபோதும் நேற்றைய போட்டியில் தோனி படைத்த முக்கிய சாதனை!
- ஷிவம் துபேவிடம் பிரச்சனை எதுவும் இல்லை… சி எஸ் கே பயிற்சியாளர் நம்பிக்கை!
- இதுக்கு தோனியை அணியில் எடுக்காமலேயே இருக்கலாம்… என்ன இப்படி பொங்கிட்டாரு பஜ்ஜி?
ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
இந்நிலையில் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கிறது.
அதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெல்ல டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.