வெள்ளி, 28 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2025 (08:41 IST)

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவராவது ஆர் சி பி அணியின் சோக வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஆர் சி பி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்நிலையில் கோலியின் முதுகுவலிப் பிரச்சனை பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில் “கோலிக்கு இருக்கும் முதுகுவலி பிரச்சனை நீண்டநாளாக இருக்கும் பிரச்சனைதான். அதை எப்படிக் கையாள்வது என அவர் கற்றுக்கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.