வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: திங்கள், 28 நவம்பர் 2022 (09:31 IST)

ஐபிஎல்- அ ஏன் குறை சொல்றீங்க… கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்து!

ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த மிகச்சிறந்த விஷயம் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 சீசன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த போட்டிகளில் 10 அணிகள் போட்டியிட்டு விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொலைகாட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு ஐபிஎல் தொடரில் அதிக கவனம் செலுத்தி விளையாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அதை கவுதம் கம்பீர் மறுத்துள்ளார். அவர் “இந்திய கிரிக்கெட் அணிக்கு நடந்த மிகச்சிறந்த நல்ல விஷயம் ஐபிஎல்” எனக் கூறியுள்ளார். கம்பீர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.