வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (09:56 IST)

ஐபிஎல் ஏலம்; ஒவ்வொரு அணியிடம் எவ்வளவு தொகை இருக்கிறது?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அணிகளிடம் உள்ள தொகை குறித்த விவரங்கள்.

ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 போட்டிகள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நேற்று அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டன.

அதை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட வீரர்களுக்கான தொகையையும் சேர்த்து தற்போது ஐபிஎல் அணிகளிடம் எவ்வளவு தொகை இருப்பு உள்ளது என்பது குறித்த விவரம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ.42.25 கோடி
பஞ்சாப் கிங்ஸ் – ரூ.32.20 கோடி
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் – ரூ.23.35 கோடி
மும்பை இந்தியன்ஸ் – 20.55 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20.45 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ.19.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் – ரூ19.25 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.13.20 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ.8.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.7.05 கோடி

Edit By Prasanth.K