1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ben stokes will high demanded player in mini auction

இந்த முறை மினி ஏலத்தில் இவருக்குதான் செம்ம டிமாண்ட் இருக்கும்… சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

IPL 2023 auctions
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அணிகளிடம் உள்ள தொகை குறித்த விவரங்கள்.

ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 போட்டிகள் விமரிசையாக நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நேற்று அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டன.

இதையடுத்து டிசம்பர் மாதத்தில் கோவாவில் மினி ஏலம் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் கலந்துகொள்ளும் நிலையில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ்க்குத்தான் அதிக எதிர்பார்ப்பு அணிகள் மத்தியில் இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

மேலும் “பென் ஸ்டோக்ஸ் ஒரு மேட்ச் வின்னர். அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
“சூர்யகுமார் யாதவ்வை மூன்றாவது இடத்தில் இறக்கக் கூடாது…” அஸ்வின் சொல்லும் காரணம்!