1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated: வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:28 IST)

உடலில் அதிக மாற்றம் செய்த தம்பதியர்...கின்னஸ் சாதனை

many tattoos couple
உடலில் அதிக மாற்றங்களைச் செய்த தம்பதியர் என்ற சாதனையை கேப்ரியேலா  மற்றும் விக்டர் ஹ்யூகோ பெரால்டா ஆகிய இருவரும் பெற்றுள்ளனர்.

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர் விக்டர் ஹ்யூகோ பெரால்டா. இவரது மனைவி கேப்ரியேலா.

இவர்கள் இருவருக்கும் உடலில் மாற்றங்களைச் செய்து மற்றவர்களிடமிருந்து எதாவது வித்யாசப்பட வேண்டுமென்ற நினைத்து, உடலில் பல டாட்டூக்களும், துளைகளும் இட்டுக்கொண்டனர்.

அதன்படி, இருவரிடன் உடலிலும் 98 டாட்டூக்களும், 50 துளைகள் உள்ளிட்ட பலவற்றை செய்ததுடன் தங்கள் நாக்கையும் பிளவுபடுத்தியுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் உடலில் அதிக மாற்றங்களைச் செய்த தம்பதிகளாக சாதனை படத்தை நிலையில், தற்போது, அதை முறியடித்துள்ளனர்.

இவர்களின் சாதனையை அங்கீகரித்து, இவர்களுக்கு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

Edited by Sinoj