வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (21:30 IST)

ஐபிஎல்- 2023: குஜராத் அணிக்கு எளிய வெற்றி இலக்கு !

ஐபிஎல் போட்டிவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில்,  ராஜஸ்தான் அணி, குஜராத் அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, அந்த அணியில் ஜெய்ஸ்வால் 14  ரன்களும்,  சேம்சன் 30 ரன்களும், டெரன்ட் 15 ரன்னும், அடித்தனர்.

எனவே 17. 5 ஓவர்கள் முடிவில்  அனைத்து விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் எடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 119 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

குஜராத் அணி சார்பில், ஷமி, பாண்ட்யா லிட்டில் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கான் 3 விக்கெட்டும், நூர் அகமத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தற்போது பேட்டிங் செய்துவரும் குஜராத் அணி 1 ஓவர் முடிவில் 9 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
.