வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 மே 2023 (23:46 IST)

ஐபிஎல்-2023: பெங்களூர் அணி திரில் வெற்றி

bangalore
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-2023- 16 வது சீசன் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் கெயிண்ட் அணி மோதியது.

இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்டன. இதில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் டுபிளசிஸ்  பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்கள் விராட் கோலி 31  ரன்களும், பிளசிஸ் 44  ரன்களும், ரவாட் 9 ரன்களும், கார்த்திக் 16 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126  அன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 127 ரன்கள் நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணி சார்பில், நவீன் 3 விக்கெட்டும், மிஸ்ரா, மற்றும் ரவி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் பாண்டியா 14  ரன்களும்,  கவுதம் 23  ரன்களும், மிஸ்ரா 19 ரன்களும் நவீன் 13  ரன்களும் அடித்தனர், எனவே 20 ஓவர்கள் முடிவில்  10 விக்கெட் இழப்பிற்கு  108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இந்த அணியின் சார்பில், சிராஜ், மேக்ஸ்வெல், ஹசங்கரா, படெல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ்ட், சர்மா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.