வியாழன், 12 மார்ச் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ஏ பிரிவில் முதலிடம்..

93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ஏ பிரிவில் முதலிடம்..
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 18-வது லீக் போட்டியில், நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
டெல்லியில்  நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய நமீபியா அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
 
நமீபியா அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா தனது வெற்றியை உறுதி செய்து, குரூப்-ஏ பிரிவில் முன்னிலை பெற்றது. 
 
ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா, இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் இந்த அதிரடி ஆட்டம் விருந்தாக அமைந்தது.
 
Edited by Siva