வியாழன், 12 மார்ச் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!
2026 டி20 உலக கோப்பையில் இந்திய அணி நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ச்சியான தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 
 
டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா, இஷான் கிஷன் (61) மற்றும் ஹர்திக் பாண்டியாவின் (52) அதிரடி அரைசதங்களால் 209 ரன்களை குவித்தது. 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நமீபியா, வருண் சக்ரவர்த்தியின் துல்லியமான பந்துவீச்சில் (3 விக்கெட்டுகள்) நிலைகுலைந்து 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
இப்போட்டியில் இந்தியா இரண்டு முக்கிய உலக சாதனைகளை படைத்தது. வெறும் 6.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதன் மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் கடந்த அணி என்ற பெருமையை பெற்றது. 
 
மேலும், 2024 முதல் தற்போது வரை உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
 
ரன்கள் அடிப்படையில் உலகக்கோப்பையில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்திய அணியின் இந்த அபாரமான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
Edited by Siva