1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2023 Himalayan victory target for Mumbai team

ஐபிஎல்-2023: மும்பை அணிக்கு இமாலய வெற்றி இலக்கு

League Matches
ஐபிஎல்-16 வது சீசனில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்,  மும்பை அணிக்கு 215  ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ்  வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

எனவே, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது,. அதன்படி, பிராப்சிம்ரன் 9 ரன்களும், தவான் 30 ரன்களும், மாட் ஷார்ட் 27 ரன்களும், லிவிங்ஸ்டன் 82  ரன்களும், ஷர்மா 49 ரன்களும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 214  ரன்கள் எடுத்து, மும்பை அணிக்கு 215   ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சாவ்லா 2 விக்கெட்டும், கசர்ஷட் கான் 1 விக்கெடும் கைப்பற்றினர்.

தற்போது மும்பை 3 ஓவர்களில் முடிவில் 22 ரன்களுடன் விளையாடி வருகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ரோஹித் சர்மா டக்-அவுட் ஆன போதிலும் வெற்றி பெற்ற மும்பை.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!