வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 மே 2023 (21:40 IST)

ஐபிஎல் 2023: கொல்கத்தா அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை எட்டுமா ஐதராபாத் அணி!

ஐபிஎல் 2023, இன்றைய போட்டியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணிக்கு 172  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்..

அதன்படி, ஜேசன் ராய் 20 ரன்னும், ராணா 42 ரன்னும், ரிங்கு சிங் 4 ரன்னும், ரசல் 24 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணிக்கு 172  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐதராபாத் அணி சார்பில், புவனேஷ்குமார், கார்த்தி, மார்கண்டே தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஜேசன் மற்றும்  நடராஜன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தற்போது பேட்டிங் செய்துவரும் ஐதராபாத் அணி 2.2 ஓவர்களில் 23  ரன்களுடன் விளையாடி வருகிறது.