தோனிக்காக தான் மொத்த கூட்டமும்.. அடுத்த வருஷம் சேப்பாக்கம் காலியா இருக்கும்: ரசிகர்கள் கருத்து..!
தோனியை பார்ப்பதற்காகத்தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் எடுக்க இளைஞர்கள் கூட்டம் குவிந்து வருகிறது என்றும் அடுத்த ஆண்டு தோனி விளையாடவில்லை என்றால் சென்னை சேப்பாக்கம் மைதானம் காலியாக இருக்கும் என்றும் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை மைதானத்தில் போட்டியை பார்க்க வேண்டும் என்பது எங்களது ஆவல் கிடையாது என்றும் தோனியை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது குறிக்கோள் என்றும் அவருக்காகவே நாங்கள் டிக்கெட் எடுத்து வருகிறோம் என்றும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
அடுத்த ஆண்டு தோனி விளையாடவில்லை என்றால் நாங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து ஐபிஎல் போட்டிகளை பார்க்க மாட்டோம் என்றும் வீட்டிலேயே மேட்ச் பார்த்துக் கொள்வோம் என்றும் பலர் கூறி வருகின்றனர்
Edited by Siva