திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 டிசம்பர் 2020 (10:20 IST)

கண்ணிமைக்கும் நேரத்தில் சரியும் விக்கெட்கள் – இந்திய அணியை நிலைகுலைக்கும் ஆஸி பவுலிங்!

இந்திய அணி பேட்ஸ்மேன்களை வருவதும் போவதுமாக ஆக்கி வருகின்றனர் ஆஸீ பவுலர்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையிலான போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின்  5 விக்கெட்கள் மளமளவென சரிந்துள்ளன. நேற்று 9 ரன்களுக்கு 1 விக்கெட் என ஆட்டத்தை முடித்த இந்திய அணி இன்று தொடர்ந்து ஆடிய நிலையில் காலையில் வந்ததும், பூம்ரா விக்கெட்டை இழந்தது.

அதன் பின்னர் வந்த புஜாரா(0), மயங்க் அகர்வால்(9), ரஹானே(0), கோலி (4) என வரிசையாக நடையைக் கட்ட இப்போது இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.