செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:17 IST)

’’அற்புதமான கேட்ச்.’’..புலிபோல் கோலி பாய்ந்து பிடித்த கேட்ச் .... வீடியோ வைரல் !!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி  அடிலெய்டில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  பேட்டிங் தேர்வு செய்தார்.இந்நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் கோலி பிடித்த கேட்ச் வைரலாகி வருகிறது.

இதில், ஆரம்பம் முதலே நிதானமாக விளையாட்டிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, இன்று இரண்டாம் நாள் ஆட்டத்ஹில் 11 ரன்களுக்கு 4 விக்கெடுகள் இழந்தது.
பின்னர்,ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஆனால் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.  சுமார் 65 ரன்களில் 4 விக்கெட்டுகள் இழந்தது.

இந்நிலையில்,  ஆஸ்திரேலிய அணிக்கு 6 வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேமரூன் என்பவரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அஸ்வின் பந்துவீசினாலும்  அப்பந்தை வேங்கபோல் பாய்ந்து அற்புதமாகக் கேட்ஸ்ச் பிடித்தார் கோலி.

இந்தக் கேட்ச் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.