1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (23:57 IST)

முன்னணி நடிகர் பெயரில் சமூக வலைதளத்தில் மோசடி...

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி அதில் ரசிகர்களுக்கு பதில் அளிப்பதுடன், புதுப்படங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் பிரபல நடிகர்களின் பெயரில் போலியான அக்கவுண்ட்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகி வருவது தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இப்போலி அக்கவுண்டுகள் தொடங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் உண்டு.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தில் நடிக்க நடிகைகள் தேவைப்படுவதாக ஒரு போலியான அக்கவுண்ட் மூலம்  மெசேஜ்  பல நடிகைகளுக்கு சென்றுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால், அந்த மெசேஜ்-ஐப் பகிந்து பல நடிகைகளுக்கு அவர் கூறியுள்ளதாவது: 

எனது பெயரை ஒருவர் தவறான காரணங்களுக்காகப் பயன்படுத்திவருகிறார். எனவே எச்சரிக்கையாக இருங்கள். இதுபோல் செயல்படுபவர்களின் வன்மத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் நான் இப்போது எனது சொந்த பேனரில் தான் நடித்து வருகிறேன். எனவே இந்தப் போலியான மெசேஜ் அனுப்பிய இன்ஸ்டா ஐடி மீது விரையில் புகார் அளிக்கவுள்ளேன். எனத் தெரிவித்துள்ளார்.