செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By

இன்று நான்காவது டி 20 போட்டி…. வெற்றியை தொடருமா இந்தியா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதையடுத்து மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று, இன்னும் தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்தது.

இந்நிலையில் இன்று நான்காவது போட்டி ராஜ்கோட்டில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும். தோல்வியடையும் பட்சத்தில் தொடரை இழக்கும். இதனால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்போடு இந்திய ரசிகர்களால் எதிர்நோக்கப்படுகிறது.