தொடர்புடைய செய்திகள்
- ஒரு பிரம்மாண்டத்தின் தொடக்கம்… ஐபிஎல் 2008 சீசனின் இறுதிப் போட்டி நாள்!
- இந்த ஐபிஎல்லில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட வீரர்? அணி? – தோற்றும் வென்ற ஆர்சிபி!
- சச்சின் உருவாக்கிய ஐபிஎல் 2022 அணி… யார் யாருக்கு இடம்?
- இதை வருங்கால தலைமுறை நினைவில் வைத்திருக்கும்! – ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சி!
- ஐபிஎல் இறுதிப் போட்டியில் அமீர்கான் பட ட்ரெய்லர்! – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா… இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு தயார்… வைரல் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு தயாராகியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஜடேஜா அளவுக்கு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியை வழிநடத்தும் பெருமிதத்தோடு களமிறங்கியிருப்பார். ஆனால் அவரின் தனிப்பட்ட மோசமான ஃபார்ம் காரணமாகவும், சி எஸ் கே அணியின் தொடர் தோல்வி காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார். அதையடுத்து கடைசி சில போட்டிகளில் காயம் காரணமாக விலகிக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்த அவர் இப்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாட உள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள இங்கிலாந்துக்கு புறப்ப்ட்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் பகிர அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்