வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (08:38 IST)

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - கேப்டனாக ரிஷப் பண்ட் வெற்றியை சுவைப்பாரா?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 

 
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. ஆம், இந்தியா - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. 
 
இதனிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலிருந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளக்கியதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
டெல்லியில் இரவு நடைபெறும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட், ருத்ராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ் குமார் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். 
 
அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரபடா  உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.