1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya may appoint as ahmedabad team captain

அக்மதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா?

ஹர்திக் பாண்ட்யா
மும்பை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை அகமதாபாத் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. நெருக்கடியான கட்டத்தில் இறங்கி பல போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறவைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள மெகா ஏலத்துக்காக அவரைக் கழட்டிவிட்டது மும்பை.

இதனால் அவர் இப்போது புதிய அணியான அகமதாபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். மொத்த ஏலத்தொகையான 90 கோடியில் 37 கோடியை 3 வீரர்களுக்காக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க அகமதாபாத் அணி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
டி 20 உலகக்கோப்பை தொடர்… இந்தியா மோதும் அணிகளின் விவரம்!