செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (09:55 IST)

ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து கைக்கடிகாரம் பறிமுதல்! – விமான நிலையத்தில் பரபரப்பு!

மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் முடிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் துபாய் சென்றிருந்த ஹர்திக் பாண்ட்யா விமானம் மூலமாக மும்பை வந்தடைந்தார்.

மும்பை வந்த ஹர்திக் பாண்ட்யாவிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை ஹர்திக் பாண்ட்யா கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்டதால் இந்த கைக்கடிகாரங்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.