செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (11:14 IST)

என் வாட்ச்கள் 5 கோடி ரூபாய் அல்ல! அந்த தகவல் பொய்! - ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!

மும்பை விமான நிலையத்தில் பறிமுதலான தனது வாட்ச்கள் 5 கோடி ரூபாய் மதிப்புடையது அல்ல என்று ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் முடிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் துபாய் சென்றிருந்த ஹர்திக் பாண்ட்யா விமானம் மூலமாக மும்பை வந்தடைந்தார்.

மும்பை வந்த ஹர்திக் பாண்ட்யாவிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூ.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை ஹர்திக் பாண்ட்யா கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, தன்னிடமிருந்து பெறப்பட்ட வாட்ச்கள் ரூ.5 கோடி மதிப்புடையவை என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. அவை 1.5 கோடி ரூபாய் மதிப்புடையவை. மேலும் உரிய ஆவணங்களை சுங்க அதிகாரிகளிடம் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.