தொடர்புடைய செய்திகள்
- எளிமையான குழப்பமில்லாத ஐடியாக்கள்… கேப்டன்சி பற்றி ஹர்திக் பாண்ட்யா பேச்சு!
- சுப்மன் கில் அபார சதம்.. 200ஐ தாண்டிய இந்திய அணியின் ஸ்கோர்..!
- கிரிக்கெட்டில் புதிய வாய்ப்புகளை ஆராய்வேன்.. ஓய்வுக்குப் பின் முரளி விஜய் நம்பிக்கை!
- உலகக் கோப்பை ஹாக்கி தோல்வி: இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் ராஜினாமா!
- இது தோனியின் கேப்டன்சி பாணி… நேற்றைய போட்டி பற்றி ஹர்திக் பாண்ட்யா பதில்!
தோனி இல்லாததால் எல்லா பொறுப்பும் என் மேல்தான்… கொஞ்சம் ஓவரா போறாரோ ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் பேசி இருக்கும் கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக டி 20 அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
தொடர் வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர் “இந்த தொடர் நாயகன் விருது மற்றும் கோப்பையும் ஊழியர்களுக்கும் செல்கிறது, அவர்கள் அனைவருக்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் இப்படித்தான் விளையாடுவேன். முன்கூட்டிய யோசனைகள் இல்லாமல், தேவையானதை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். எனது கேப்டன்சியில், நான் அதை எளிமையாக வைத்து, எனது தைரியத்தை ஆதரிக்கிறேன்.
மேலும் அவர் “எனக்கு மைதானத்தின் எல்லா பக்கத்திலும் சிக்ஸ் அடிக்க ஆசை. ஆனால் நான் இப்போது பார்ட்னர்ஷிப்களில் அதிக நம்பிக்கை வைக்கிறேன். முன்பு தோனி பின் வரிசையில் இறங்கி விளையாடினார். இப்போது தோனி இல்லாததால் எல்லா பொறுப்பும் என் தலையில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.