ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:27 IST)

கிரிக்கெட்டில் புதிய வாய்ப்புகளை ஆராய்வேன்.. ஓய்வுக்குப் பின் முரளி விஜய் நம்பிக்கை!

இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் சிலவற்றில் விளையாடியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரள் விஜய். ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்காகவும், மற்ற பிற அணிகளுக்காவும் விளையாடியுள்ள அவருக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் இதுபற்றி சில நாட்களுக்கு முன்னட் அவர் ”நான் வெளிநாட்டில் நடக்கும் தொடர்களில் விளையாட ஆசைப்படுகிறேன். இங்கே 30 வயது ஆகிவிட்டாலே 80 வயது ஆகிவிட்டதாக நினைக்கிறார்கள். என்னால் இன்னும் கொஞ்சம் காலம் சிறப்பாக விளையாட முடியும். ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்புகளே இல்லை” எனக் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையடுத்து இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் “கிரிக்கெட்டில் புதிய வாய்ப்புகளை நான் ஆராய்வேன். ஒரு கிரிக்கெட்டராக எனது பயணத்தின் அடுத்த கட்டமாக இது இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.