வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (15:50 IST)

இது தோனியின் கேப்டன்சி பாணி… நேற்றைய போட்டி பற்றி ஹர்திக் பாண்ட்யா பதில்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 100 ரன்கள் என்ற இலக்கை இந்தியா கடைசி பந்து வரை கொண்டு சென்று வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடைசி நேரத்தில் 19.5 வது ஓவரில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்வளவு பொறுமையாக இலக்கை துரத்தியது ஏன் எனக் கேட்ட போது அதற்கு பாண்ட்யா “இதுபோன்ற மெதுவான மைதானங்களில் விளையாடும் போது வீரர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். மைதானங்களை எப்படி அனுகுகிறார்கள் என்று பார்த்து அதற்கேற்றார்போல வியூகங்கள் வகுக்க முடியும். இது தோனியின் கேப்டன்சி பாணி” எனக் கூறியுள்ளார்.