வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (20:45 IST)

சுப்மன் கில் அபார சதம்.. 200ஐ தாண்டிய இந்திய அணியின் ஸ்கோர்..!

subhman gill
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. 
இந்த நிலையில் சற்றுமுன் இந்திய அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் மிக அபாரமாக விளையாடி 126 ரன்கள் எடுத்தார் ராகுல் திருப்பாத்தி 44 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் நிலையில் 235 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் 235 என்ற இலக்கை எட்டுவது மிகவும் கடினம் என்றும் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் முற்றுப்புள்ளி இந்த போட்டியின் இந்தியா வென்று தொடரையும் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva