செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: திங்கள், 30 ஜனவரி 2023 (23:05 IST)

உலகக் கோப்பை ஹாக்கி தோல்வி: இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் ராஜினாமா!

india hockey
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் தோல்வியால் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளார் கிரஹாம் தன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஒடிஷா மாநிலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடந்தது,

இதில், உலகில் உள்ள அமெரிக்கா, நியூசிலாந்து , ஜெர்மனி,  உள்ளிட்ட முன்னணி அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இதில், குரூப் டி-ல் இடம்பெற்ற இந்திய அணி, கிராஸ் ஓவரில்  நியூசிலாந்திடம் தோற்றதால் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறவில்லை.

இந்திய அணி 9 வது இடமே பிடித்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளார் கிரஹாம் ரெய்ட் இந்திய அணியின் தோல்வியால் தன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அதேபோல்,  அனலைடிக் பயிற்சியாளர் கிரேக் கிளார்க் மற்றும் ஆலோசகர் மிட்ச்செல் ஆகியோரும் தங்கள் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.