புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (16:15 IST)

கோலிக்கும் எனக்கும் இடையிலான உறவு பற்றி பொதுவெளியில் பேச முடியாது- கம்பீர்

டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து இன்று காலை அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அணி குறித்து பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது அவருக்கும் அணி மூத்த வீரரான கோலிக்கும் இடையிலான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் “இது டி ஆர் பிக்கான நல்ல கேள்வி. ஆனால் எங்கள் இருவருக்குமிடையிலான உறவு குறித்து வெளிப்படையாக என்னால் பேச முடியாது. இருவரும் முதிர்ச்சியடைந்த மனிதர்கள். இப்போது நாங்கள் 140 கோடி இந்தியர்களுக்காக ஒரே அணியில் ஆட இருக்கிறோம். இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ஒரே நோக்கம். நான் விராட்டுடன் களத்துக்கு வெளியே எப்போதும் நல்ல உறவையே பேணி வருகிறேன்.  அது தொடரும்’ எனக் கூறியுள்ளார்.