1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant will quit delhi capitals and join csk

அணி நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு… சிஎஸ்கே அணிக்குத் தாவுகிறாரா ரிஷப் பண்ட்?

ரிஷப் பண்ட்
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து நடந்த உலகக் கோப்பை தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தார். இந்நிலையில் அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகத்தோடு அவருக்கு மோதல் எழுந்துள்ளதாகவும் அதனால் அவர் சி எஸ் கே அணிக்கு தாவ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி எஸ் கே அணியில் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ள சூழ்நிலையில் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை அணிக்குள் கொண்டுவர சி எஸ் கே அணியும் ஆசைப்படுவதாக தெரிகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ருத்துராஜுக்கு கிடைக்கும் ஆதரவு… தேர்வுக்குழுவை கழுவி ஊத்தும் முன்னாள் வீரர்கள்!