ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஆகஸ்ட் 2022 (10:29 IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி… மண்ணைக் கவ்விய இங்கிலாந்து!

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்துள்ளது.

இதனையடுத்து முதலாவது இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்க, இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடிய இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியை வென்றது.