தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து திணறல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து திணறல்!
தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.
கடந்த 17ஆம் தேதி ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது/ ஆனால் அந்த அணி 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
இதனையடுத்து முதலாவது இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் 38 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது என்பதும் தற்போது அந்த அணி 123 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது