புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (11:36 IST)

வறண்டது தேம்ஸ் நதி!!

இங்கிலாந்தில் வெப்பத்தால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அவற்றின் இயல்பான நீர்மட்டத்தை விட நன்றாகக் குறைந்துவிட்டன.


ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட சில பகுதிகளில் அதீத வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது.

வெப்ப அலை தாங்க முடியாமல் மக்கள் பலர் உயிரிழந்து வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பம் தாளாமல் இறந்து விழுந்துள்ளனர்.

வெப்பத்தால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அவற்றின் இயல்பான நீர்மட்டத்தை விட நன்றாகக் குறைந்துவிட்டன. குறிப்பாக தேம்ஸ் நதி முன்னேப்பதும் இல்லாததை விட தற்போது கீழ்நோக்கி சென்று விட்டது. இது தொடர்ந்தால் இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராக உள்ளதாக சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தேம்ஸ் நதி, தென் மத்திய இங்கிலாந்தின் கண்கவர் காட்ஸ்வோல்ட் மலைகளிலுள்ள நான்கு ஊற்றுகளிலிருந்து பெருக்கெடுக்கிறது. அது கிழக்கு நோக்கி 350 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடுகையில் மற்ற நதிகளும் சேர்ந்து கொள்கின்றன. கடைசியாக 29 கிலோமீட்டர் அகன்ற ஒரு கழிமுகத்தைக் கடந்து வட கடலில் சென்று கலக்கிறது.