ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:10 IST)

காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!

england vs india
காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!
காமன்வெல்த்  கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது சற்றுமுன் வரை அந்த அணியின் 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது 
 
இன்னும் 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்