திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:13 IST)

காமல்வெல்த் போட்டித்தொடர்… மாயமான 3 இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்தின் பிர்ஹிங்ஹாம் பகுதியில் தற்போது காமன்வெல்த் போட்டித் தொடர் நடந்து வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி தொடர் 71 ஆவது  போட்டி தொடராகும். இதில் பல பிரிவுகளின் கீழ் விளையாட்டு போட்டிகள் நடக்க, பெண்கள் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளில் கலந்துகொள்ள சென்ற இரண்டு இலங்கை வீரர்கள் உள்ளிட்ட ஒரு அணி நிர்வாகியும் மாயமாகியுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஜூடோ வீரர், மல்யுத்த வீரர், ஜூடோ விளையாட்டு மேலாளர் ஆகிய மூவர் மாயமாகியுள்ளனர். இதை இலங்கை செய்தி தொடர்பு அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அவர்களை இங்கிலாந்து போலீஸார் தேடி வருவதாகவும், அவர்களால் இங்கிலாந்து எல்லையைத் தாண்டி செல்ல முடியாது எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.