1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. England attacking aussie in second day

ஆஷஸ் தொடர்… இரண்டாவது நாளில் அதிரடி காட்டிய இங்கிலாந்து!

ஆஷஸ்
நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டி தொடங்கிய நிலையில் முதலில் ஆஸி அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தின் மூலம் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தங்கள் அதிரடி ஆட்டமான பாஸ்பால் ஆட்டமுறையை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஸாக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட்ர் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 278 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஹேரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணி ஆஸி அணியை விட 138 ரன்கள் பின் தங்கியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?.. பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான சோக செய்தி!