திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (09:00 IST)

இரண்டாவது ஆஷஸ் போட்டி… இன்று லார்ட்ஸில் தொடங்குகிறது!

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது இன்றைய போட்டி.

இந்த போட்டியில் ஆஸி அணி முதல் போட்டியில் விளையாடிய அதே அணியே விளையாடும் என சொல்லப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து அணியில் மொயின் அலி நீக்கப்பட்டு ஜோஷ் டங்க் விளையாடுவார் என சொல்லப்படுகிறது.