திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (18:02 IST)

மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரரை குண்டுகட்டாக தூக்கிய வீரர்! அஸ்வின் கிண்டல் டுவீட்...வைரல் வீடியோ

BAIRSTOW
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே 5 போட்டிகளைக் கொண்ட ஆஸஸ் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, பர்மிங்கில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில்  தோற்றது. இந்த நிலையில், இன்று  முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, லார்ட்ஸ் மைதானத்திற்குள் திடீரென்று ஆரஞ்சு நிற பவுடருடன் நுழைந்த போராட்டக்காரர்களில் ஒருவரை, இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ அவரைப் பிடித்து குண்டுகட்டாக தூககிக் கொண்டு சென்று மைதானத்திற்கு வெளியே விட்டார்.

இந்த வீடியோவை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய வீரர் அஸ்வின்,’’ இன்றைய 2 வது டெஸ்ட் நன்றாக தொடங்கியது, பேஸ்ட்டோ ஹெவி லிஃப்டிங் தூக்கியதாக’’ கிண்டலடித்துள்ளார்.