வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (09:20 IST)

மகளிர் ஆஷஸ் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!

மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.
 
ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
ஜூன் 22 ஆம் தேதி தொடங்கிய மகளிர் ஆஷஸ் இரண்டாவது போட்டி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் எண்ணிக்கையில் 473 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 257 ரன்களும் எடுத்தது. 
 
இதனை அடுத்து முதலில் 463 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணிக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 178 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த நிலையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva