ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 23 மே 2024 (09:02 IST)

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

ஐபிஎல் 17 ஆவது சீசனில்  நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரர்கள் பலரும் சொதப்பியதால் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடியவில்லை.

இதையடுத்து பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 17 ஆண்டு கால கோப்பை காத்திருப்பு மீண்டும் ஆர் சி பி அணிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

லீக் போட்டிகளில் தொடர்ந்து 6 போட்டிகளை வென்று ப்ளே ஆஃப் வந்த ஆர் சி பி அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ப்ளே ஆஃபில் தோற்று வெளியேறியது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார்.