ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மே 2024 (07:58 IST)

இதுக்காடா இந்த ஆட்டம் போட்டிங்க.. ஆர்சிபி தோல்வியை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில்  ஆர்சிபி   அணி தோல்வி அடைந்ததை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை  ஆர்சிபி   அணி தோற்கடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அப்போது பெங்களூர் அணி ரசிகர்கள் ஆட்டம் போட்டனர் என்பதும் குறிப்பாக பெங்களூர் அணி வீரர்கள் ஐபிஎல் கோப்பையை வென்று விட்டது போல் மைதானத்தில் கொண்டாடியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடுப்பாக்கியது.

இந்த நிலையில் தற்போது நேற்று நடந்த போட்டியில்  ஆர்சிபி   அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் இந்த தோல்வியை கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் ஏராளமான மீம்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள்  மீது ஆர்சிபி அணியினர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் ’என்ன ஆட்டம் போட்டீங்க, இந்த தோல்விக்காகதானா’ என்றும் ’ஹாப்பி இன்று முதல் ஹாப்பி’ என்ற பாடலையும் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர். ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை வென்ற போது கொண்டாடிய கொண்டாட்டத்தை விட ஆர்சிபி  அணியின் தோல்வியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva