திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மே 2024 (08:14 IST)

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

கோயிலுக்கு வந்த பக்தையிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயிலுக்கு வந்த பக்தையிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது வழக்குப்பதிவு செய்யபட்ட நிலையில் அர்ச்சகர் கார்த்திக் தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்ய தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக காளிகாம்பாள் கோவில் அர்ச்சகராக இருந்த கார்த்திக் என்பவர் இளம்பெண் ஒருவருக்கு  தீர்த்தம் என எதையோ குடிக்க வைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்த நிலையில் அப்பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva