ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (23:17 IST)

''வயலில் டிராக்டர் ஓட்டும் தோனி''..வைரலாகும் வீடியோ

cricket
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விவசாயம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர், ஒரு நாள், டி-20, ஐசிசி சேம்பியன்ஷிப் ஆகிய முத்தரப்பு கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு  ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த  நிலையில், டோனி இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் பண்ணையில் உள்ள வயலில் டிராக்டர் ஓட்டி உழுது விவசாயம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)