ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (15:13 IST)

அடுத்த டி-20 உலகக் கோப்பையில் ரோஹித் விளையாடுவாரா? முன்னாள் வீரர் தகவல்

Rohit Sharma
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் அடுத்த டி-20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முன்னணி அணியாகவும் திறமையான வீரர்களைக் கொண்ட அணியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கேப்டன் ரோஹித் சர்மா, கோலி ஆகியோருக்கு டி-20 போட்டிகளின்போது ஓய்வு தரப்படுகிறது.

இளம் வீர்களை உருவாக்கும் பொருட்டு பிசிசிஐ இப்படி செய்வதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், அடுத்த டி-20  உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: விராட் மற்றும் ரோஹித்திற்கு  நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான டி-20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது.

இனி வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் விளையாடுவர். உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிவிடும், அடுத்த டி-20 உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் விளையாடுவார் என  நினைக்கவில்லை; ஆனால், கோலி விளையாடுவார். இளம் வீரர்கள் இடம்பெறுவர் என தெரிவித்துள்ளார்.