ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 28 ஜனவரி 2023 (15:23 IST)

ஜார்கண்ட்: தன்பாத் மருத்துவமனையில் தீ விபத்து- 5 பேர் பலி

jharkhand
ஜார்கண்ட் மாநில தன்பாத்தில் உள்ள தன்பாத் மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள தன்பாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டத்.

இந்த விபத்தில் மருத்துவர், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.