1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:41 IST)

வட மாநில இளைஞர் கொலை : 7 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்(29). இவர் வேளச்சேரியில் உள்ள விஜிபில் செல்வா நகரில் தொழிலாளர்களுடன் வசித்து வந்தார்.

இவர் கடந்த 27 ஆம் தேதி காய்கறிகள் வாங்கிக் கொண்டு சாலையில் வரும்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர்  நடனமாடியுள்ளார். அதில் ஒருவரது கால் ரமேஷின் மீது பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அவர்களை காக்கியுதாகக் கூறப்படுகிறது.

இதில், இளைஞர்கள் ரமேஷை பதிலுக்கு தாக்கியுள்ளனர்,. இதில், காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலைன்றி இறந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், 16 வயதிற்குட்பட்ட 7 பேர் அவர்களுடன் சேர்ந்து மேலும் 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.