திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (16:23 IST)

கடைசி போட்டியிலிருந்து தீபக் சாஹர் விலகல்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெஸ்ட் இண்டீஸுடனான கடைசி போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடைசி போட்டி வருகிற 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.