ஹாட்ரிக் விக்கெட்டில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர்..
இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார் குல்தீப் யாதவ்
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 50ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் அடித்தன. பின்பு இதனை சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 280 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதனிடையே 33 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவர் முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை ஹாட்ரிக் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.