வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (15:53 IST)

காற்றில் பறந்து கோல் அடித்த ரொனால்டோ.. வைரல் வீடியோ

காற்றில் ஒன்னரை வினாடிகள் பறந்தபடியே கோல் அடித்த ரொனால்டோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலியில் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சம்ப்டோரியாவுக்கு ஜூவண்ட்சுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் ரொனால்டோ 2.5 பறந்துவந்த பந்தை 2.5 மீட்டர் தூரத்திற்கு தவ்வி தனது தலையால் போஸ்ட்டை நோக்கி தனது கோலை தட்டிவிட்டார்.

இவ்வாறு காற்றில் பறந்து ரொனால்டோ அடித்த கோலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரொனால்டோ “எங்களது வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. அந்த போட்டி மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. சம்ப்டோரியா அணி இதில் சிறப்பாக விளையாடியுள்ளனர். நான் இவ்வளவு தூரம் தவ்வினேன் என எனக்கே தெரியவில்லை” என கூறியுள்ளார்.